அமெரிக்காவை சேர்ந்த Jalin White என்ற 20 வயது இளைஞர் மனைவி வெளியில் சென்று இருந்த சமயம் தனது 8 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தான் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த White தனது கையில் வைத்திருந்த குழந்தையை சுவற்றில் தூக்கி வீசி உள்ளார். இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.