தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஒரு சில வீடுகளில் பயன்படுத்தியதற்கு அதிகமான மின் கட்டணம் வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .அதில் மாவட்ட வாரியாக மின் மீட்டர்கள் பழுதடைந்து காணப்படும் விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

இவற்றை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் பழுதடைந்த மின்மீட்டர்கள் தான் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே எங்கெல்லாம் மின்மீட்டர்கள் பழுது அடைந்துள்ளதோ அங்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து புதிய மின்மீட்டர் மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..