
கன்னியாகுமரியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் தன் மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் 2 பேர் முகமூடியுடன் மோகன்தாஸின் வீட்டுக்குள் புகுந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
அதன்பின் அவர் சுயநினைவின்றி கீழே விழுந்தார். பின்பு அவர்கள் அவரது மகளை மிரட்டி 200 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன்தாசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.