உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணை கடந்த 1-ம் தேதி சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தற்போது தான் புகார் அளித்துள்ளார்.

அந்தப் பெண்ணை வீடு புகுந்து சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திர் சிங், அவரது சகோதரர் வாரிந்தர் சிங், அவருடைய மகன் அமன் சிங் மற்றும் சந்தோஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.