இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டும். கொடிய விஷம் உடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு தற்போது வந்து இடையூறு அளிப்பது மட்டுமல்லாமல் சமையலறை மற்றும் வாகனம் என பல இடங்களில் பதுங்கி இருந்து அச்சுறுத்துகிறது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் ஒரு பெரிய பாறைக்கு அடியில் பல பாம்புகள் சுருண்டு கிடக்கும் காட்சிகள் உள்ளது. மேலும் குளியல் அறையில் வாளியில் ஒருவர் ஏராளமான பாம்புகளை கவனமாக சேகரிப்பதும் அங்குள்ள பாறைக்கு அடியில் இருந்து மேலும் பல பாம்பு குட்டிகள் வெளிவரும் காட்சிகளும் உள்ளன. வீட்டிலிருந்து கொத்து கொத்தாக பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.