
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவ நாளில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் நைசாக பேசி அங்குள்ள ஒரு நூலக கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் திருமண ஆசை காட்டி அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.