சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக வசித்து வந்தார்.

இவரது மகன் பிரதாப். இவருக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார்.துரைசிங்கத்திற்கு இதயமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக துரை சிங்கத்தின் வீடு பூட்டியை இருந்தது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது துரை சிங்கத்தின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பின்பு போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் துரைசிங்கம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். மேலும் இது குறித்து பிரதாப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் பிரதாப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.