ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். மூன்று மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர்.

இதனால் அவமானத்தில் ஹேமப்பிரியா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்ற ஹேமப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஹேமபிரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டது.