சத்தீஸ்கர் மாநிலத்தில் வினய் குமார் சாகு (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் படிப்பு முடித்த நிலையில் அரசு பணிக்கு தயாராகி வந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாது தான் மிகவும் மன வேதனையில் இருந்த அவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார். இவர் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் செல்போன் மற்றும் பணம் போன்றவற்றை திருடிய நிலையில் ஒரு வீட்டிற்கு திருடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஒரு தம்பதி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மறைந்திருந்து பார்த்த வாலிபர் அவர்கள் உல்லாசமாக இருப்பதை செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அந்த தம்பதிக்கு அவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த தம்பதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.