சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன தங்கம். 65 வயதான இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் என்பவர் சின்னதங்கத்திடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சின்ன தங்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரவிந்தை கைது செய்தனர். இதற்கிடையி சிகிச்சை பெற்று வந்த சின்ன தங்கம் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.