
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர்
வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதில் சிறுமியின் பெற்றோர் தினசரி வேலைக்காக நாகர்கோவிலுக்கு செல்வார்கள். அந்த வகையில் சம்பவ நாளில் சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அரவிந்த் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அவர் சிறுமியிடம் நைசாக பேசி அங்கிருந்த ஒரு நூலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தன் பெற்றோரிடம் கூறினார். பின்னர் அவர்கள் அரவிந்தை சந்தித்து அது பற்றி கேட்டபோது அவர் சிறுமியின் தாயாரை மிரட்டினார். இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்தை வலைவீசி தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..