
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.