பொதுவாக கோடை காலம் என்றாலே ஒரு சில வீடுகளில் மண்பானையில் தண்ணீர் வைத்து விடுவார்கள். இப்படி வைக்கப்படும் தண்ணீரை நாம் குடிப்பதால் சளி, இருமல் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. மாறாக பிரிட்ஜில் வைக்கப்படும் தண்ணீர் குடித்தால் தான் இது போன்ற பிரச்சினை ஏற்படும். மண் பானையில் தண்ணீர் வைப்பதை பாரம்பரியமாக செய்து வருவதற்கு என்ன காரணம்? இதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மை என்ன? என்பது குறித்து பார்க்கலாம். மண்பானையில் உள்ள தண்ணீரை பருகுவது பழந்தமிழர்களின் பழங்கால பழக்கங்களில் ஒன்று.

நவீன வாழ்க்கை மாறினாலும் இந்த பழக்கம் இன்னும் ஒரு சில வீடுகளில் மாறாமல் உள்ளது. களிமண் பானையில் தண்ணீர் வைப்பதால் மெடபாலிசம் அதிகமாகின்றது.  இந்த தண்ணீரில் முக்கியமான தாதுக்கள் இருப்பதால் செரிமானம் எளிதில் நடக்கும். கோடைகாலத்தில் எழும் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இந்த மண்பானைக்கு உண்டு.

உடல் குளிர்ச்சியாகும். பொதுவாக பானை செய்யும் களிமண்ணில் பலவித தாதுக்கள் உள்ளது. இது உடலுக்கு தேவையான சமயங்களில் உதவுகிறது. இயற்கையான தண்ணீரில் அழுக்குகள் மற்றும் தீங்குகள் நிறைந்த நச்சுக்கள் இருக்கும். அதை இல்லாமல் சுத்தமான தண்ணீரை தரும் வேலையும் மண்பானை செய்கிறது. அதாவது இயற்கையான முறையில் சுத்திகரிப்பு செய்கிறது.