தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்டப் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக சூப்பராக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய காதலர் குறித்து பேட்டி ஒன்றி பகிர்ந்துள்ளார். அதில், பள்ளியில் படிக்கும்போது ஒருவரிடம் காதலை சொன்னேன்.

சில நாட்கள் கழித்து அவர் என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அடிக்கடி நாங்கள் செல்போனில் பேசிக்கொண்டோம். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருக்க போர்வைக்குள் ஒளிந்து கொண்டு பேசுவேன். இந்நிலையில் சினிமா வாய்ப்புகள் வந்ததால் படிப்பையும், காதலையும் என்னால் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார்.