
குஜராத் மாநிலத்தில் உள்ள வாடலி பகுதியில் வினு சாகர் (42)-கோகிலா பென் (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 17 மற்றும் 18 வயதில் 2 மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை திடீரென இவர்களுடைய குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் புகார் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்தபோது 5 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் அனைவரும் விஷம் குடித்து இருப்பதாக கூறிய நிலையில் உடனடியாக சிகிச்சையை தொடங்கினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி வினு மற்றும் அவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் குழந்தைகள் மூவருக்கும் தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.