பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் 25 வயதுடைய தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் பூட்டி மறைத்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது முகேஷ் சிங்கின் மகள் தன்னுடன் கல்லூரியில் படித்த வேற்று சமூகத்து வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த நான்காம் தேதி முகேஷ் சிங்கின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் டெல்லிக்கு சென்று விட்டார். உடனே முகேஷ் தனது மகளை வீட்டிற்கு வருமாறு கெஞ்சி அழைத்துள்ளார். இதனால் முகேஷ் சிங்கின் மகள் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முகேஷ் சிங் தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் பூட்டி விட்டார்.

இதற்கிடையே வீட்டிற்கு வந்த மகள் எங்கே என மனைவி கேட்டபோது மீண்டும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக முகேஷ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து முகேஷ் சிங்கின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது.