
ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் கார்டு விவரங்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மொபைல் எண்ணை மாற்றினாலும் கட்டாயமாக அந்த மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
புதிய செல்போன் எண்ணை இணைக்க அல்லது செல்போன் எண்ணை மாற்ற இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று “வீட்டு வாசல் வங்கி சேவை” என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், ஆதாருடன் இணைக்க வேண்டிய செல்போன் எண்ணை தேர்வு செய்த பிறகு உங்களுக்கு அருகில் இருக்கும் வங்கி கிளையிலிருந்து கால் வரும். அதன் பின்னர் தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து விவரங்களை சரிபார்ப்பார். இதனை அடுத்து, உங்களது மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும்.