குஜராத் மாநிலம் சூரத் நகரில் இரண்டு மாதம் வீட்டு வாடகை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் ஒருவர் இளம் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த  தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து தெரியவில்லை.

வீட்டில் உரிமையாளரான ஜெயேந்திர மாணவவாலா அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இதனை அடுத்து அந்த பெண் வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் கண்ணில் காயம் ஏற்பட்டதையடுத்து பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் அளித்துள்ளார்.