தேனி மாவட்டம் நகர்போர்டு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஜெயா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீது புகார் ஒன்று  அளித்துள்ளார்.

அந்த புகாரில் ஜெயா கூறியதாவது, மாவட்ட குழந்தை நல திட்ட அலுவலரான ராஜராஜேஸ்வரி அவர் வீட்டிலுள்ள வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துகிறார். அதனை மறுத்தால் தன்னை பழிவாங்கும் எண்ணத்தில் என் மீது பொய் புகார் அளித்துள்ளார்.

மேலும் வாடகை கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடிக்கு தன்னை பணியிட மாற்றம் செய்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு ஜெயா அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.