பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே விரும்புகிறார்கள்.

வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் உள்ள மக்கள் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. வீணா போன நாலு பேர் யாராவது இதை செய்திருப்பார்கள்.

அதற்காக பாகிஸ்தான் என ஒட்டுமொத்தமாக நாம் சொல்லிவிடக்கூடாது. தப்பானவர்கள் செய்த செயல் இது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்களும் மனிதர்கள் தான். நாமும் மனிதர்கள் தான் என கூறியுள்ளார்.