இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக லெபனான் மீதும் ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது. இதில் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது இஸ்ரேல் ராணுவத்தை இந்திய ராணுவ தளபதி உபேந்திர திபேதி புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இதுபோன்ற துல்லியமான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பல வருடங்களாக தயாராகி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் வெடிக்கும் பேஜர்களை உருவாக்குவதற்காக பொய் நிறுவனங்களை உருவாக்கியது அசத்தல் நடவடிக்கை என்று கூறியுள்ளார். மேலும் இந்திய ராணுவ தளபதி இஸ்ரேல் ராணுவம் பேஜர்களை வெடிக்க வைத்ததை பாராட்டியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.