
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இந்நிலையில் தனுஷ் மற்றும் நயன்தாரா மோதல் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நயன்தாரா தன்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த ஆணவப்படத்தில் பயன்படுத்தியதால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு நயன்தாரா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனுஷை சரமாரியாக விளாசி அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் நயன்தாரா மீது காப்பிரைட்ஸ் உரிமை கேட்டு வழக்கு தொடர தனுஷுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன் பிறகு சமீபத்தில் நயன்தாரா நீங்கள் செய்த கர்மா உங்களை வந்து அடிக்கும் என்று பதிவிட்டு இருந்தார். முன்னதாக விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்து வாழு அல்லது வாழவிடு என்ற தலைப்பில் தனுஷை விமர்சித்து ஒரு பதிவை போட்ட நிலையில் பின்னர் சிறிது நேரத்தில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதாவது விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடிதான் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த நிலையில் அந்த படத்தை தயாரித்த தனுஷை அவர் விமர்சித்தது சர்ச்சையாக மாறிய நிலையில் படத்தின் பட்ஜெட்டை விட 10 கோடி ரூபாய் அதிகமாக செலவானதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு ஆவேசம் போன்ற ஒரு படத்தின் கதையை தான் தான் சொன்னதாகவும் ஆனால் படத்தில் என்ன மெசேஜ் என்று இருக்கிறது கூறி படத்தை நிராகரித்து விட்டதாகவும் கூறினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய x பக்கத்தில் கணக்கை டெலிட் செய்துள்ளார். அவர் ஆக்டிவாக இருந்த நிலையில் அவர் மீது பல்வேறு கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தற்போது எக்ஸ் கணக்கை டெலிட் செய்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் விக்னேஷ் சிவன் மீது அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகள் எழுவதால் தற்போது இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.