கொலம்பியாவில் வசிக்கும் கேத்தி ஜூவினோ என்பவர் கிரீன் கட்சியை சேர்ந்தவர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கேடி ஜூவினோ வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தலைநகர் பக்கோடாவில் இருக்கும் பாராளுமன்ற அவையில் பொது சுகாதாரம் தொடர்பான மசோதாவுக்கான விவாதம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற கேத்தி ஜூவினோ தான் மறைத்து வைத்திருந்த இ-சிகரட்டை கொண்டு புகைப்படம் பிடித்துள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனையடுத்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கேட்டார்.