இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டிடத்தில் சௌகரியமாக ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும்போது சில ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதாவது முன்பதிவு செய்த போது வரும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் ரயிலில் பயணிக்கலாமா கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். டிக்கெட் கவுண்டரில் தரப்படும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்க முடியும். ஆனால் ஆன்லைன் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் பயணிக்க முடியாது. அதை மீறி பயணித்தால் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிப்பவராக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்க ரயில்வே விதி வழி வகுத்துள்ளது.