உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ இந்திரா நகரில் சுனில் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் தனது வீட்டை பூட்டி விட்டு வாரணாசிக்கு சென்று விட்டார். கடந்த இரண்டாம் தேதி வீட்டில் முன்பக்க கேட் உடைந்திருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் சுனில் பாண்டேவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது திருடன் ஒருவன் தலையணையை வைத்து அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நபரை போலீசார் தட்டி எழுப்பி விசாரித்த போது, வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு திருட வந்தது உறுதியானது. அதிக மதுபோதையில் இருந்ததால் அறைக்கு சென்று ஏசியை போட்டு அசந்து தூங்கி உள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.