பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய முன்னாள் காதலியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது நடிகை திஷா பதானி தமிழில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் கல்கி 2898 ஏடி‌ திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சாக்கு பையாலான மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.