
சவுதி அரேபியாவில் செருப்பு விற்பனை செய்யும் ஒரு சில்லறை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஒருவர் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பல்வேறு விதமான ரப்பர் செருப்புகளை விற்பனைக்காக வாடிக்கையாளர்களிடம் காட்டுகிறார். அப்போது ஊழியர் ஒருவர் கையில் கையுறை அணிந்து கொண்டு வெள்ளை நிற ரப்பர் செருப்பை எடுத்து வாடிக்கையாளரிடம் காண்பித்தார்.
அப்போது அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் என்று கூறினார். நம் நாட்டில் சாதாரண ரப்பர் செருப்பு ரூ.100 முதல் விற்பனை செய்யப்படும் நிலையில் அந்நாட்டில் ரூ.1 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வர நிலையில் ஒருவர் நாங்கள் கழிவறைக்கு செல்லும்போது தான் அந்த செருப்பை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த செருப்பின் விலை இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் ரூ.60 முதல் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
متداول:
احدث صيحات الموضة “زنوبة” بسعر 4500 ريال 👀!
#حمد_العنزي pic.twitter.com/Djc3pe7XBz
— ترند (@trndkw__) July 8, 2024