தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்தப் பொருள்கள் 50 கிலோ சாக்கு பைகளில் அனுப்பப்படுகிறது. இந்த பைகளை 20 ரூபாய் வரை கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்கின்றன. இது அவர்களுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க உதவியது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பை மூலமாக அனைத்து கடைகளுக்கும் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. இது ஒரு பை மூன்று ரூபாய் மட்டுமே விலை போவதால் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.