இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 436 செலுத்தி இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு நன்மை பெறலாம். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள். பாலிசிதாரர் ஏதாவது காரணத்தால் உயிரிழந்தால் நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இந்த காலத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். எந்த ஒரு வங்கிக் கிடைக்கும் சென்று இந்த திட்டத்தில் இணைந்து பயன் தரலாம்.