
மகாராஷ்டிராவில் சிவ் போஜன் என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளுக்கு மட்டும் 2 லட்சம் தாலிகளில் மானிய விலையில் பத்து ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள்.
அந்த வகையில் கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை மட்டுமே 4.25 கோடி தாலிகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் லோக் சபா தேர்தல் நடைபெற இருக்கும் வகையில் சிவ் போஜன் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தாலிகளுக்கு பதிலாக 10 லட்சம் தாலிகளில் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.