
இந்தியப் பிரீமியர் லீக் (IPL) போட்டியின் வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக டெப்யூ செய்த 14 வயதும் 23 நாட்களும் உடைய வைபவ் சூரியவன்ஷி, IPL வரலாற்றில் எப்போதும் ஆடிய சிறிய வயது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட் (LSG) அணிக்கெதிரான லீக் சுற்று போட்டியில் வாய்ப்பு பெற்ற வைபவ், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை சொக்க வைத்தார். இடது கை பேட்ஸ்மேனான அவர், வெறும் 20 பந்துகளில் 34 ரன்கள், இதில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்
2025 IPL மெகா ஏக்க்ஷனில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வாகிய வைபவ், தனது முதல் போட்டியிலேயே சாமர்த்தியத்தை நிரூபித்துள்ளார்.
இவரது பிரமிப்பூட்டும் டெப்யூவைக் கண்ட கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, சமூக வலைதளமான X-இல், “8ம் வகுப்பு படிக்கும் குழந்தை IPL-ல் விளையாடுறது பார்க்க கண்ணெதிரில் நிகழ்ந்த அற்புதம் போல இருக்கு! என்ன ஒரு டெப்யூ!” என்று எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி, சாகர், சச்சின் டெண்டுல்கர் என பட்டியலில் இடம் பிடிக்க இளைய வயதில் சாதனை படைத்தவர்கள் சிலர். அந்த பட்டியலில் இப்போது இடம்பிடித்துள்ளார் வைபவ் சூரியவன்ஷி.
IPL வரலாற்றில் சிறுவயதில் டெப்யூ செய்ததோடு, அதே போட்டியிலேயே ஒரு சிக்ஸும், பவுண்டரியும் அடித்த சிறுவன் என்ற சாதனையும் வைபவ் பெற்றுள்ளார். மேலும் சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது வீடியோ வைரலாகி வருகிறது.