மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை வருடந்தோறும் புதுப்பிக்கும் நிலையில் விபத்தினால் உயிரிழந்தவர்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் தபால் அலுவலக கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்புவர்கள் வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களை அணுகலாம். சில வங்கிகள் இணையதளம் மூலமாகவே பாலிசியை பெறுவதற்கு அனுமதிக்கிறது. இந்த திட்டத்தில் இணைபவர்களின் வங்கி கணக்கில் இருந்து ஒரு வருடத்திற்கு ஆட்டோ டெபிட் மூலம் 20 ரூபாய் கழிக்கப்படும். அதன் பிறகு விபத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வரை கவரேஜ் தொகையும், விபத்தில் பகுதியளவு பாதிப்படைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையும் கவரேஜ் தொகை வழங்கப்படுகிறது.