
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். வார்த்தை வித்தகரான இவர் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைப்பவர். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் உலாவ விட்டு அப்ளாசை அள்ளினார். அந்த படம் தேசிய விருது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விருதுகளையும் குவித்தது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் வடிவேலுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு “வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எது என்று தெரியாது… ஆனால்..” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பார்த்திபன் வடிவேல் இருவரும் குண்டக்க மண்டக்க படத்தில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது,ஆனா……! pic.twitter.com/98g9zWdtlC
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025