
இந்தியாவில் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிய நகரங்களில் நகரங்களுக்குள்ளேயான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏராளமான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாடுகளில் ரயில் போன்ற நீண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம்.
இதுபோன்ற நீண்ட பேருந்துகளை இந்தியாவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேருந்தில் விமானம் போன்ற வசதிகள் இருக்கும் என்றும் 132 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.