
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சந்தன பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொரடாலா சிவமணி (20) என்பவர் பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா சென்று நர்சிங் படிக்க முயன்றுள்ளார். ஆனால் இதற்கு மூன்றரை லட்சம் தேவைப்பட்டதால் இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்களால் மூன்று லட்சம் கடன் பெற முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக வருத்தத்தில் இருந்த சிவமணி விரக்தியடைந்து இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.