கூகுள் பே அதன் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது, சமீபத்தில் அந்நிறுவனம் மற்றும் NPCI ‘இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்’ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இனி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி யுபிஐ மூலம் நேரடியாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு வணிகர்கள் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுடன் எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.