தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தங்கத்தின் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடாகவும் கருதி வருகிறார்கள். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆனது தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்கத்தின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

ஆறு மாதத்திற்கு மேலாக வெளிநாட்டில் வசித்து வரும் எந்த ஒரு  NRI, OCI அல்லது இந்திய குடிமகனும் இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வரலாம். ஆண்கள் 20 கிராம் வரை மற்றும் பெண்கள் 40 கிராம் வரை கொண்டு வரலாம். எடை அளவு மதிப்பு குறிப்பிட்டு வரம்புகளின் மீராத வரை தங்க நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் என எப்படி வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆண்கள் கொண்டுவரும் 20 கிராமுக்கு குறைவாக நகைக்கு சுங்கவரி கிடையாது. பெண்கள் கொண்டுவரும் 40 கிராமிற்கும் குறைவான நகைக்கு சுங்கவரி கிடையாது.