தமிழகத்தைச் சேர்ந்தவர் முகம்மது பாரூக் என்றவர். இவர் தனது வேலைக்காக துபாய்க்கு விசிட் விசா மூலம் சென்றுள்ளார். இவர் அபுதாபியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆவணங்கள் இல்லாமல்  வேலைக்கு சேர்ந்தார்.  இந்நிலையில் அவருக்கு அந்த ஹோட்டலின்  உரிமையாளர் சம்பளம் தராமல் இருந்ததால், முகம்மது பாரூக் தனது பாஸ்போர்ட்டை திரும்பி கேட்டுள்ளார். ஆனால் அந்த உரிமையாளர் பாஸ்போர்ட்டை தர மறுத்துள்ளார். இதையடுத்து முகமது பாரூக் இந்திய துணை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து அவரது  பாஸ்போர்ட் அதிகாரிகள்  பெற்று கொடுத்தனர்.

பின் அந்த பாஸ்போர்ட்டுடன் முகமது பாரூக் தனது சொந்த ஊருக்கு செல்ல தேவையான ஆவணங்களையும் கொடுத்தனர். அதோடு விமான டிக்கெட்டும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் அபுதாபியில் இருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு நேற்று முன்தினம் பத்திரமாக திரும்பினார். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது, “வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் முறையான ஆவணங்களை  கொண்டு செல்ல வேண்டும், மேலும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது” என்று கூறினார்.