
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜகதீஷ் என்ற கிராமத்தில் சஹ்னாஸ் பானோ என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் மஹ்பூல் அகமது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சஹ்னாஸ் பானோவுக்கு இர்பான் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் திடீரென சஹ்னாஸ் கர்ப்பமானார். இதனால் சஹ்னாஸ் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கருவை கலைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கருக்கலைப்பு செய்த போது திடீரென அந்த பெண்ணுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்தார். இதனால் அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்யும் ஒரு நர்ஸ் மற்றும் இர்பான் ஆகியோர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணின் சடலத்தை எடுத்து வந்து ஒரு கோதுமை பண்ணையில் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டனர்.
மேலும் இது போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் இர்பான் மற்றும் அந்த நர்சை கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததால் சம்பந்தப்பட்ட ஹாஸ்பிடல் மீதும் நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஹாஸ்பிடலை மூடிவிட்டனர். அந்த ஹாஸ்பிடலின் டாக்டர் மீதும் வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.