கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரி என்ற பெண்ணிடம் அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூபாய் 4.7 லட்சம் பணத்தை குமாரி, அபிலாஷிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் அபிலாஷ் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தராமலும், பணத்தைக் கேட்டும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். எனவே குமாரி தக்கலை காவல் நிலையத்தில் அபிலாஷ் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் தக்கலை காவல்துறையினர் பண மோசடி செய்ததற்காக அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.