
மூச்சுத் திணறல் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என்று மனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள் சிலர் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு முதியோர் மற்றும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் கோடை வெயில் முடியும் வரை மலையேற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.