காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நேற்று தன்னுடைய 54-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தான் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிவதற்கான காரணத்தை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணியும் நிலையில் அது ஏன் என்ற கேள்வி பலரது மத்தியில் வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி நேற்றைய தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அதற்கான காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

நான் எப்போதும் வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டும் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி பலரது மத்தியிலும் நிலவுகிறது. அதற்குக் காரணம் வெள்ளை நிறம் என்பது வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமையை உணர்த்துகிறது. நான் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அதாவது உங்களுடைய வாழ்க்கையில் வெள்ளை நிற டி-ஷர்ட் காண மதிப்பு எங்கே எப்படி இருக்கும் என்பதை வீடியோ வடிவில் சொல்லுங்கள். இதனை White T-shirt Army என்ற ஹேஷ்ஸ்டைக்கை பயன்படுத்தி வீடியோ வடிவில் சொல்லுங்கள். மேலும் நான் உங்களுக்கு ஒரு வெள்ளை நிற டி-ஷர்டை பரிசாக தருகிறேன் என்று கூறியுள்ளார்.