
சென்னை சாலிகிராமம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இசை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர், மழைநீர் புகுந்ததினால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பம் மேல்தள அறைக்கு சென்று தங்கியிருந்தனர் என தெரிவித்தனர். இவ்வாறு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் வசித்த இசை ஆசிரியர் சுரேந்தர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறுமியை அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி கதறி அழுதபடி தனது பெற்றோரிடம் வந்து புகார் செய்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சுரேந்தர் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், சாலிகிராமம் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் பெற்றோரின் கூற்று மற்றும் பல சாட்சியங்களின் அடிப்படையில் சுரேந்தரை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு நீதிமன்றத்தில் விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.