தமிழகத்தில் வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தென் மாவட்டங்களிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிவாரணத்தொகைகளை வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்தால் மட்டுமே வெள்ள நிவாரணம் பெற முடியும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நிவாரணத் தொகை வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.