
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சாலை தடுப்பின் மீது ஏறி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது எதிர் திசையில் வந்த ஒரு பைக்கும் கரெக்டான பாதையில் சென்ற ஒரு பைக்கும் மோதியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நிலையில் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
कोईलवर के सकड्डी के पास अवैध कट से जा रही बाइक गलत लेन से जा रही बाइक से टकराईं #Bihar #BiharCrime #BiharNews #CCTV #Bhojpur #Ara #Accident #Bike pic.twitter.com/YhbG9XqQDE
— Yogesh Sahu (@ysaha951) February 28, 2025