இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இது பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.