நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா.  நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் இயக்குனர் ராஜ் நெடிமொருவை காதலிப்பதாக மீண்டும் பேசி வருகிறார்கள். சமந்தா நடித்த பேமிலி மேன்-2, சிட்டாடல் ஹனி பனி இந்த இரண்டு வெப் தொடர்களையும் இயக்கியவர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆவார்கள். அதில் ராஜ் நெடிமுருவும், சமந்தாவும் காதலிப்பதாக சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தி  நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். அப்போது வெளியான புகைப்படத்தை பார்த்தவர்களோ சமந்தா ராஜ் நெடிமுருவை காதலிக்கிறார் போன்று அதனால் தான் இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் இது விபரீத காதல் வேண்டாம் சம்மு என்று ரசிகர்கள் எச்சரித்து வந்தார்கள். அதனை தொடர்ந்து பிக்கிபால் விளையாட்டில் இருவரும் கைகோர்த்து படி வந்த புகைப்படத்தை அடுத்து மீண்டும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணமான ஆணை காதலிப்பது உங்களுக்கு தான் பிரச்சனையாகும். அவரின் மனைவி சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.