திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியை அமுதா சச்சினை அழைத்து அவரது மணிக்கட்டில் பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் சச்சின் அலறி துடித்தார். இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காயமடைந்த தங்களது மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.