பிரபல நடிகரான விஜயும், த்ரிஷாவுடன் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. சினிமாவை தாண்டி இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். சோசியல் மீடியாவில் விஜய்யும் திரிஷாவையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு த்ரிஷாவும், விஜயும் தனி விமானத்தில் சென்றதாக இணையத்தில் பல்வேறு செய்திகள் வந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது அரசியல் பயணத்தின் போது விஜய் வேனில் நின்றபடி தமிழக வெற்றி கழக கொடியை கையில் வைத்து சுற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். அந்த வீடியோவையும் உனக்கும் எனக்கும் படத்தில் திரிஷா மாடியில் நின்று தாவணியை சுற்றும் வீடியோவையும் ஒன்று சேர்த்து ஆகாயம் இத்தனை நாள் என்ற காதல் பாடலை ஒலிக்க வைத்துள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jessie 🎀 (@jazee_fx)