தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது பேருந்துகள் என்றே சொல்லலாம். ஏனெனில் பேருந்துகளில் மக்களுடைய நலனுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சிவசங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர்,  வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இருபதாயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2200 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆயிரம் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இந்த வாரத்தில் மேலும் 300 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.